மாஸ்கோ:
இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியில், நாட்டின் கோரிக்கையை ரஷியா ஏற்றுக்கொண்டதுடன், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற கொள்கை தொடரும் என்று கூறியுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்று உள்ளார்.
இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று மாலை மாஸ்கோவில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகுவை சந்தித்து பேசினார்.
ராஜ்நாத் சிங் மற்றும் ஜெனரல் ஷோயுகு இடையேயான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த சந்திப்பு மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்ககவில்லை என்ற கொள்கையை ரஷியா தட்ருவதாக மீண்டும் வலியுறுத்தியது.
இரு அமைச்சர்களும் நட்பு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டி உள்ளது.
"இன்று மாஸ்கோவில் ரஷிய பாதுகாப்பு மந்திரி ஜெனரல் செர்ஜி ஷோயுகுடனான சந்திப்பு சிறந்த சந்திப்பாக இருந்தது. நாங்கள் இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது பற்றியும் பலவிதமான பிரச்சினைகள் குறித்து பேசினோம்" என்று ராஜ்நாத் சிங் தனது சந்திப்பு குறித்து டுவிட் செய்து உள்ளார்.