Image Courtacy: AFP 
உலக செய்திகள்

உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெறக்கூடாது - பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெறக்கூடாது என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெர்லின்,

ஜெர்மனியில் நடைபெற்ற 'ஜி-7' நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் போர் விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்தும் 'ஜி-7' தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

இந்த நிலையில் 'ஜி-7' மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெறக்கூடாது என கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், " 'ஜி-7' நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தேவைப்படும் வரை மற்றும் தேவையான தீவிரத்துடன் பராமரிக்க உறுதிப்பூண்டுள்ளன. உக்ரைன் போரில் ரஷியாவால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறக்கூடாது" என கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து