மாஸ்கோ,
ரஷியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்து 425 பேருக்கு இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் அங்கு மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 705 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. 24 மணி நேரத்தில் 153 பேர் இறந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ நகரில் ஆயிரத்து 81 பேருக்கும், மாஸ்கோ மாகாணத்தில் 504 பேருக்கும், சாண்டி-மன்ச் பகுதியில் 319 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவிளல் இருந்து நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 13 பேர் குணமாகினர். ரஷியா முழுவதும் இதுவரை 3 லட்சத்து 56 ஆயிரத்து 429 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்