மாஸ்கோ,
விண்வெளி ஆயுதம் என்று சொல்லப்படும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தியது என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.
ரஷ்யாவின் இந்த செயல்கள் விண்வெளியின் அமைதியான பயன்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது என்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் உலகம் சார்ந்திருக்கும் விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய குப்பைகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல், இதுபோன்ற எந்தவொரு சோதனையையும் தவிர்க்க ரஷ்யாவை நாங்கள் கேட்டு கொள்கிறோம் என இங்கிலாந்தின் விண்வெளி மையமும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சக நாடுகள் நிபுணத்துவத்துடன் பேச வேண்டும் போலியான தகவல்களை பரப்பும் வகையில் செயல்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே சோதனை நடைபெற்றதாகவும் இந்த விவகாரத்தில் நிதானமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.