உலக செய்திகள்

உக்ரைன் மீது படை எடுக்க தயாரான ரஷ்யா; எல்லையில் வீரர்கள் குவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதனை தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது.

இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லை பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனிற்கு உதவ, அங்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ வீரர்களை நேட்டோ கூட்டமைப்பு நிலை நிறுத்தினால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தார். உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, புதினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு