கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 45.80 லட்சத்தைக் கடந்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் பிரான்சும், ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,80,894 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 357 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 374-ஆக (1,00,374) உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 42,04,081 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,76,439 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது