மாஸ்கோ,
ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 28,77,727 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 493 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 19,705 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 22,95,362 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,31,014 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்