உலக செய்திகள்

உக்ரைனில் அணு உலைக்கு அருகில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி நாளையுடன் (புதன்கிழமை) 6 மாதங்கள் ஆகிறது.

கீவ், 

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி நாளையுடன் (புதன்கிழமை) 6 மாதங்கள் ஆகிறது.ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரின் சமீபத்திய பிரச்சினையாக உக்ரைனில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு அலையான ஜபோரிஜியா அணுஉலை மாறியிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகில் ரஷியா தாக்குதல் நடத்தியது. இது மிகப்பெரிய பேரழிவு அணு விபத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலை தெரிவித்தன.

குறிப்பாக ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகே தாக்குதல்களில் ஈடுபட கூடாது என உக்ரைன் மற்றும் ரஷியாவை வலியுறுத்தின. இந்த நிலையில் ஜபோரிஜியா அணுஉலைக்கு அருகில் ரஷியா நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜபோரிஜியா அணுஉலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நிகோபோல் என்ற இடத்தில் ரஷியா தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து ரஷியா தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு