உலக செய்திகள்

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் ரஷியா நேரடி பேச்சுவார்த்தை!

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் ரஷியா நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

மாஸ்கோ,

ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், இருதரப்பும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், இருதரப்பும் ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் அமையும்.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா இன்று கூறுகையில், "கொரோனா பெருந்தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் தொடர்பாக இருநாட்டு குழுக்களுக்கு இடையே நேருக்கு நேர் சந்திப்பு நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது" என்று கூறினார்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே நீடித்திருக்கும் சில முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு