உலக செய்திகள்

ஆயுதம் வாங்கும் சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு, ரஷியா எச்சரிக்கை

ஆயுதம் வாங்கும் சீனா மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாக ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையே ஏற்கனவே வர்த்தகப்போர் நடந்து வந்தாலும், தற்போதைய பொருளாதார தடைகள் ரஷியாவை குறிவைத்து போடப்பட்டவை என்றும் அமெரிக்கா தரப்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால், ரஷிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையுடன் வர்த்தகம் செய்யுமுன் பிறநாடுகளை ஒன்றுக்கு இருமுறை யோசிக்கவும் வைக்கும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள், என சீனா எச்சரிக்கையை விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ரஷியாவும் எச்சரிகையை விடுத்துள்ளது. அமெரிக்கா நெருப்புடன் விளையாடுவதாக ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காரஷியா உறவில் பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம், சர்வதேச ஸ்திரத்தன்மை குலைவதை அமெரிக்கா நினைவில் வைத்தால் நல்லது என அந்த நாட்டு வெளியுறவு துணை மந்திரி செர்ஜெய் ரியாப்கோவ் கூறினார்.

இந்த பொருளாதார தடையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை எனவும் ரஷியா கூறியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்