உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய படையெடுப்பு, உலக அமைதி மீதான தாக்குதல்: ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு, உலக அமைதி மீதான தாக்குதல் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

தினத்தந்தி

ஜோ பைடன் ஆவேசம்

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பின்லாந்து பிரதமர் சவுலி நினிஸ்டோவை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மை மீதான தாக்குதல் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

போலந்து அதிபருடன் பேச்சு

முன்னதாக போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு தங்கள் நாட்டின் பதில் மற்றும் நட்பு நாடுகளின் பதில் என்ன? என்று ஜோ பைடன் கேட்டார்.

போலந்து நாட்டுக்கும், நேட்டோ கூட்டாளிகளின் பாதுகாப்புக்கும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று அவரிடம் ஜோ பைடன் உறுதி அளித்தார்.

கூடுதலாக 7 ஆயிரம் படை வீரர்கள்

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நிருபர்களிடம் பேசுகையில், நேட்டோவின் கிழக்குப்பகுதியை வலுப்படுத்த அமெரிக்கா கூடுதலாக 7 ஆயிரம் படை வீரர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி உள்ளது என தெரிவித்தார்.

மேலும் ரஷியா மீதான பொருளாதார தடைகளை மேலும் இறுக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது