உலக செய்திகள்

ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை

பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

உக்ரைனுடனான போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததோடு, ரஷியாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் தடை செய்தன. இந்த சூழலில் ரஷியாவிடம் இருந்து சீனா தற்போது அதிக அளவில் எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை