உலக செய்திகள்

போலந்து வான்வெளிக்குள் ரஷிய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு

அச்சுறுத்தலை ஏற்படுத்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வார்சா,

போலந்து நாட்டின் வான்வெளிக்குள் ரஷிய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேற்று இரவு போலந்து வான்வெளிக்குள் ஏராளமான ரஷிய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன. நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பதிவிட்டுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சந்தேகத்திற்குரிய பொருட்களை கண்டால் மக்கள் அவற்றை தொடவோ அல்லது நகர்த்தவோ கூடாது என்றும் போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஆபத்தான வெடிப்பொருட்கள் இருக்கலாம் எனவும், அதனால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போலந்து பாதுகாப்புத்துறை மந்திரி விளாடிஸ்லாவ் கோசினியாக்-காமிஸ் கூறுகையில், பத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், போலந்தின் பாதுகாப்பிற்கு ஏற்பட இருந்த ஆபத்து தகர்க்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்