உலக செய்திகள்

ரஷிய ஹெலிகாப்டர் பயிற்சியின்போது ஏரியில் விழுந்து விபத்து

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரில் 3 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

மாஸ்கோ,

கரேலியா மாகாணத்தில் ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான எம்ஐ-8 என்ற ஹெலிகாப்டர், மூன்று பணியாளர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அந்த பகுதியில் உள்ள ஒனேகா ஏரியில் 50 அடி ஆழத்தில் மூழ்கி உள்ளதாக அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரின் பாகங்களை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரை அனுபம் வாய்ந்த விமானிகள் இயக்கியதாக அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்