உலக செய்திகள்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷியாவின் தாக்குதலை கண்டித்த உக்ரைன் பிரதிநிதி!

உக்ரைன் சார்பில் ஐ.நா.வுக்கான உக்ரைனின் நிரந்தர பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷியாவின் தாக்குதலை கண்டித்து பேசினார்.

தினத்தந்தி

நியூயார்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைன் சார்பில் ஐ.நா.வுக்கான உக்ரைனின் நிரந்தர பிரதிநிதி செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷியாவின் தாக்குதலை கண்டித்து பேசினார்.

அவர் பேசியதாவது, உக்ரைனில் ரஷிய துருப்புக்கள் தொடர்ந்து போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்னர் நாசி படைகள் செயல்பட்டதை போல ரஷியா செயல்படுகிறது.பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்