உலக செய்திகள்

ரஷ்யாவுடன் பேச்சு நடத்த அமெரிக்கா விருப்பம் - ரஷ்ய அமைச்சர்

இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை இருந்தாலும் பேச்சு வார்த்தையை தொடர அமெரிக்கா விரும்புவதாக ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்தார்.

மாஸ்கோ

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பல சிக்கலான பிரச்சினைகளை தங்களது துணை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளில் அலசுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மணிலாவில் நடந்த சர்வதேச அளவிலான மாநாடு ஒன்றின் சமயத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தனது நாட்டின் மீது ரஷ்யா கோபம் கொண்டு தூதரக அதிகாரிகளை வெளியேறச் சொன்னது, குத்தகைக்கு கொடுத்த தூதரக அலுவலகத்தை ஒப்படைக்கச் சொன்னது போன்ற விவகாரங்களை கேட்டதாக தெரிவித்த ரஷ்ய அமைச்சர் இதற்கு தகுதியான பதில் விளக்கங்களை அளித்ததாக கூறினார்.

புடின் தங்களது நிலைப்பாட்டை ஊடகங்களில் விளக்கியுள்ளதையும் டில்லர்சன்னிடம் எடுத்துரைத்ததாக லாவ்ரோவ் தெரிவித்தார். அமெரிக்க அமைச்சருடன் பல விஷயங்கள் குறித்து விரிவாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசுவது தவிர வேறொரு மாற்று இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை

உக்ரைன் விவகாரத்தை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான வோல்கருடன் புடினின் மூத்த அதிகாரி சுர்கோவ் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று கூறினார் அமைச்சர். உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதால் வோல்கர் அங்கு அனுப்பப்பட்டார். உக்ரைன் பிரிவினைவாதப் பிரிச்சினையே ரஷ்ய, அமெரிக்கா இடையிலான சிறப்பான உறவிற்கு முக்கிய தடங்கலாக இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.

அமெரிக்க பிரதிநிதியின் கருத்துக்களை ரஷ்யா ஆவலோடு எதிர்பார்க்கிறது என்றும் லாவ்ரோவ் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு