மாஸ்கோ,
கிழக்கு, மத்திய தரைக்கடல், கருங்கடல், ஆர்ட்டிக் பெருங்கடலின் பாரண்ட்ஸ் கடல் ஆகிய பகுதிகளில் ரஷ்ய கடற்படைகள் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. கிழக்கு, மத்திய தரைக்கடலில் நடைபெற்ற போர் பயிற்சிகளை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கெய் சோய்கு ஆய்வு செய்தார்.
முக்கியமான கடல் பகுதிகளில் இருந்து வரும் ராணுவ அச்சுறுத்தல்களை முறியடித்து, தேசிய நலன்களை பாதுகாப்பதே இந்த ராணுவ பயிற்சிகளின் நோக்கம் என ரஷ்யாவின் கடற்படை தலைமை தளபதி நிகோலாய் யோவ்மெனோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வடக்கு கடற்படை கிட்டத்தட்ட 20 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை பாரண்டஸ் கடலுக்கு அனுப்பி, நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளில் ஈடுபட்டது. ரஷ்யாவின் 2022 ஆம் ஆண்டிற்கான பயிற்சி திட்டத்தின்படி இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 140-க்கும் மேற்பட்ட ராணுவ கப்பல்கள், 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுத படைகள் கலந்து கொண்டன.