உலக செய்திகள்

ரஷிய-உக்ரைன் போர்: உச்சம் தொட்ட உலோக விலை...!

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது.

தினத்தந்தி

உக்ரைன்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும், மற்றொரு பக்கம் சண்டையும் உக்கிரம் அடைந்து வருவது சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷிய-உக்ரைன் மோதல் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன்னுக்கு 3,552 டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 2 லட்சத்து 69 ஆயிரத்து 172 ஆகும். தொழில்துறை சார்ந்த உலோகங்கள் ரஷியாவில் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை