உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம்; உலகளாவிய வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம், உலகளாவிய வர்த்தக சந்தையில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷ்யா-உக்ரைன் இடையிலான பதற்றம் உலகளாவிய உணவு பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏனெனில் உலக தானியச் சந்தையில் இருதரப்பினரும் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் ஏற்கனவே உலகளாவிய சந்தையில் வர்த்தக நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அதிகரித்துள்ள போர் பதற்றத்தை தணிக்க அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தேவை என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இது உலகளாவிய வர்த்தக சந்தையில் ஏற்றுமதியாளர்களிடையே தானிய ஏற்றுமதிக்கான திட்டமிடல் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தவிர சோளம், சோயா பீன்ஸ், கோதுமையின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்