உலக செய்திகள்

தென்கொரியா-இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அணுமின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து தென்கொரியா-இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினத்தந்தி

ஜகார்த்தா,

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக கடந்த ஆண்டு இந்தோனேசியா மாறியது. இந்தநிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தென்கொரியா மற்றும் இந்தோனேசியாவின் மந்திரிகள், தொழிலபதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது முக்கிய கனிமங்கள் மற்றும் பிற தொழில்துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அணுமின் உற்பத்தி குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக இரு நாட்டு அணுமின் சங்கங்கள் சார்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை