சியோல்,
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி 9 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 25-ந் தேதி முடிகிறது. இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கிறது. இதற்காக தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, தென்கொரியா சென்றுள்ளது.
வடகொரியா குழு தலைவராக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோங் நாம் தென்கொரியா சென்றிருந்தார். இந்த நிலையில்,தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்கவிழாவை முன்னிட்டு தென்கொரிய அதிபர் விருந்து அளித்து கவுரவித்தார். இந்த விருந்தில், வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோங் நாம் கலந்துகொண்டார். தென் கொரிய அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தின் போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், கிம் யோங் நாம் உள்பட வடகொரியாவின் அனைத்து முக்கிய பிரநிதிகளையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து வடகொரியா - தென் கொரியா இடையே மீண்டும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
1950-53 ஆண்டு நடைபெற்ற கொரிய போருக்கு பிறகு, வடகொரியாவில் ஆட்சி செய்யும் குடும்ப உறுப்பினர், தென்கொரியாவுக்கு சென்று இருப்பது இதுதான் முதல் தடவையாகும்.