உலக செய்திகள்

சவுதி அரேபிய கப்பல்கள் தாக்குதல் பின்னணியில் ஈரான் - அமெரிக்கா குற்றச்சாட்டு

சவுதி அரேபிய கப்பல்கள் தாக்குதல் பின்னணியில் ஈரான் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

நியூயார்க்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள புஜைரா துறைமுகத்தில் கடந்த 12-ந் தேதி, சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என சவுதி அரேபியா சந்தேகம் தெரிவித்தது.

இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன் கூறுகையில், சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதில் சந்தேகமே இல்லை என்றார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அதே சமயம் ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்