Image Courtesy :Stringer/ Reuters 
உலக செய்திகள்

கொளுந்து விட்டெரியும் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கிடங்கு..!

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரியாத்,

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீ பற்றியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு அருகில் சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டி நடைபெறுவதாக இருந்தது. குறித்த தாக்குதல் சம்பவத்தால் பார்முலா 1 கார் போட்டி நடைபெற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு