உலக செய்திகள்

சவுதி பத்திரிகையாளர் கொலையில் இளவரசருக்கு தொடர்பு: ‘கண்களை மூடிக்கொள்வேன் என்கிறார்’ - டிரம்ப் மீது துருக்கி பாய்ச்சல்

சவுதி பத்திரிகையாளர் கொலையில் இளவரசருக்குள்ள தொடர்பு விவகாரத்தில், டிரம்ப் மீது துருக்கி அதிருப்தி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்தில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்துவோம், தண்டிக்காமல் விட மாட்டோம் என்ற உறுதியான நிலையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் எடுத்தார்.

ஆனால் இந்தக் கொலை, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உத்தரவின் பேரில்தான் நடந்தது என்று அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் (சி.ஐ.ஏ.) கண்டு பிடித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் நிலையில் மாற்றம் தெரிகிறது. சி.ஐ.ஏ.யின் கண்டுபிடிப்பை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

மாறாக, கசோக்கி படுகொலையில் சவுதி பட்டத்து இளவரசர் குற்றவாளி என சி.ஐ.ஏ. கண்டறியவில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி, மன்னர் சல்மான் அல்லது பட்டத்து இளவரசர் இந்த அட்டூழியத்தை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொலையால் சவுதி அரேபியாவுடனான உறவு பாதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார். இதை துருக்கி கடுமையாக சாடி உள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மெவ்லுட் கவுசோக்லு கருத்து தெரிவிக்கையில், ஒரு வகையில் பார்த்தால், கசோக்கி படுகொலையில் நான் கண்களை மூடிக்கொள்வேன் என்கிறார் டிரம்ப் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.


நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது