உலக செய்திகள்

சவுதி பத்திரிகையாளர் படுகொலை: 5 பேருக்கு மரண தண்டனை?

சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கசோக்கி (வயது 60) என்ற பத்திரிகையாளர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு கடந்த மாதம் 2–ந் தேதி சென்றிருந்தபோது, அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ரியாத்,

ஜமால் கசோக்கியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கசோக்கி படுகொலையை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.

இந்த கொலையில் சவுதி அரேபியாவில் 21 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெறும்.

கசோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டு, அதை நிறைவேற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டித்தந்து மேற்பார்வை செய்த குற்றச்சாட்டில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசு வக்கீல் கோரி உள்ளார்.

மற்றவர்கள் மீதான விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...