உலக செய்திகள்

புனித மக்காவில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி இராணுவத்தினரால் முறியடிப்பு

புனித மக்காவில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கபட்டது. இதில் 11 பேர் காயம் அடைந்தனர்




புனித நகரான மக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, சவுதி அரேபியப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது.

இரு தீவிரவாதக் குழுக்கள் இணைந்து தாக்குதலுக்குத் திட்டமிட்டதாய் சவுதி அரேபிய உள்துறை அமைச்சுப் பேச்சாளர் கூறினார். மூன்றாவது குழு, ஜெட்டா நகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது.

வழிபாடு நடத்துபவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து.

இதனையடுத்து தற்கொலை படை தீவிரவாதியை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதன்போது பயங்கரவாதி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

இந்த அனர்த்தம் காரணமாக சம்பவத்தில், ஆறு வெளிநாட்டினரும், ஐந்து பாதுகாப்புப் படை அதிகாரிகளும் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.