உலக செய்திகள்

ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படை தாக்குதல்; 8 ஹிஜ்புல்லா தீவிரவாதிகள் பலி

ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய தாக்குதலில் லெபனானை சேர்ந்த ஹிஜ்புல்லா தீவிரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

ரியாத்,

ஏமனின் வடக்கே சாடா மாகாணத்தில் மரான் என்ற பகுதி உள்ளது. இங்கு ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு பழங்குடியினர் அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினர் வன்முறையில் ஈடுபடும் பழங்குடியினரை கட்டுப்படுத்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி கூட்டணி படையின் செய்தி தொடர்பு நிர்வாகியான துருக்கி அல் மாலிக்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மரான் பகுதியில் 41 தீவிரவாதிகளை கூட்டணி படை கொன்றுள்ளது. அவர்களின் வாகனங்கள் மற்றும் சாதனங்களும் அழிக்கப்பட்டு விட்டன. அவர்களில் தளபதி ஒருவர் உள்பட லெபனானை சேர்ந்த ஹிஜ்புல்லா அமைப்பின் தீவிரவாதிகள் 8 பேரும் அடங்குவர் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...