உலக செய்திகள்

இங்கிலாந்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

சீனா உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், 'கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு