உலக செய்திகள்

சிரியாவில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் பலி

சிரியாவில் எண்ணெய் லாரி மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஆப்ரின்,

சிரியாவில் ஆப்ரின் நகரில் எண்ணெய் லாரி ஒன்றின் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இவர்களில் 11 பேர் குழந்தைகள். 6 பேர் துருக்கி ஆதரவு போராளிகள் ஆவர்.

இதனை தொடர்ந்து நகரை அடுத்த மஹ்மூதியே பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. எனினும் இதில் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவரவில்லை. எந்தவொரு அமைப்பும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச்சில் குர்தீஷ் தலைமையிலான பயங்கரவாதிகளிடம் இருந்து துருக்கி மற்றும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஆப்ரின் நகரை கைப்பற்றினர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்