உலக செய்திகள்

ஏமனில் அமெரிக்க படை வான்வழி தாக்குதல்; அல் கொய்தா தளபதி பலி

ஏமன் நாட்டில் நடந்த அமெரிக்க படையினரின் வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

ஏமன்,

ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா தீவிரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது. இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக இருந்து வருபவர் படாவி.

இவர் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது நடந்த ஆயுத தாக்குதலில் தொடர்புடையவர். இந்த தாக்குதலில் 17 அமெரிக்க கப்பற்படை சிப்பந்திகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தீவிரவாத இயக்க ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது திடீரென அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன என கூறப்படுகிறது. இதில் அவர் கொல்லப்பட்டார்.

எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை