கோப்புப் படம் AFP 
உலக செய்திகள்

காதலியுடன் ஜப்பான் பயணம் சென்ற ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

கடந்த 2018-ம் ஆண்டு ஜப்பான் பயணத்தின் போது ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உக்ரைன் மீதான போரில் முக்கிய பங்கை வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் வகிக்கிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு முக்கியமான நபராகக் கருதப்படும் லாவ்ரோவ் கடந்த 2018-ம் ஆண்டு ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பயணத்தின் போது செர்ஜி லாவ்ரோவ் உடன் அவரது நீண்ட நாள் காதலி என்று கூறப்படும் ஸ்வெட்லானா பாலியாகோவும் மேலும் அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் ரஷியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஒலெக் டெரிபாஸ்காவும் உள்ளார். இந்த புகைப்படம் உணவகம் ஒன்றிற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை