கோப்புப்படம் 
உலக செய்திகள்

சோமாலியாவில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி

சோமாலியா ராணுவத்தால் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மொகாதிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-சபாப் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலி தேசிய ராணுவம் தீவிர வேட்டையில் உள்ளது. அந்தவகையில் மத்திய சோமாலியாவின் முதுக் பிராந்தியத்துக்கு உட்பட்ட கோப்யோவில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தின் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது.

இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பயங்கரவாதிகளை ராணுவம் பின்னர் கைது செய்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை