உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடத்தல்காரர்கள் உள்பட 7 பேர் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கடத்தல்காரர்கள் 5 பேர் உள்பட 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

மஜார் இ ஷெரீப்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தில் கடத்தல்காரர்கள் சிலர் 2 பேரை சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க பணய தொகை கேட்டு மிரட்டலும் விடுத்தனர். அவர்களை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர்.

கடத்தல் கும்பலை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கடத்தல்காரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், கடத்தல் கும்பல் சிறை பிடித்து வைத்திருந்த 2 பேரும் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.

இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்