கராச்சி,
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பீர் காயிப் பகுதியில் நேற்றிரவு படை வீரர்களின் வாகனம் ஒன்றை இலக்காக கொண்டு பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்தனர். இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் பலுசிஸ்தானின் கெச் என்ற இடத்தில், எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்காக பாதுகாப்பு படையினர் தூய்மைப்படுத்தும் பணியில் இன்று காலை ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.