உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - 4 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தில் குண்டு வெடித்தது.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. அதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், காபூலில் ஷெப்கிஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டி காபூல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் காயமடைந்து உள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் விளையாட்டு வீரர் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை