Image Courtesy: AFP 
உலக செய்திகள்

இஸ்ரேல்: டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 6 பேர் படுகாயம்

இஸ்ரேல் நாட்டின் பரபரப்பான டெல் அவிவ் நகரில் உள்ள தெருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் படுகாயமடைந்தனர்

தினத்தந்தி

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு பல பார்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அதிக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மையம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபர். மேலும் அவர்களில் மூன்று பேர் தீவிரமான அல்லது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய புனித இஸ்லாமிய மாதமான ரமலானுக்கு முன்னதாக பாலஸ்தீனிய தொடர் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் அதிகமாக அங்கு காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை