உலக செய்திகள்

கிரீசில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

கிரீசில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

கர்பத்தோஸ்,

கிரீசில் தென்கிழக்கில் கர்பத்தோஸ் நகரில் இருந்து 149 கி.மீ. தொலைவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 37.84 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.