உலக செய்திகள்

துருக்கியில் கடுமையான வெள்ளம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

துருக்கியில் வெள்ளம், நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

அங்காரா,

துருக்கி நாட்டில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் கஸ்டமோனு மற்றும் சினோப் ஆகிய இரு மாகாணங்களில் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த மாகாணங்களை பேரிடர் மண்டலங்களாக அதிபர் டயீப் எர்டோகன் அறிவித்து உள்ளார். இந்த சூழலில், 95 சதவீத மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

கஸ்டமோனு மாகாணத்தில் 36 பேரும், சினோப் மாகாணத்தில் 7 பேரும் என மொத்தம் 43 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிபர் எர்டோகன், எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் மீட்பு பணிகளை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்