உலக செய்திகள்

கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை - அதிபர் டிரம்ப் கருத்து

கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபரானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்று தெரிவித்தார். கமலா ஹாரிசை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறிய டிரம்ப், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக மாற முடியாது என்றும் விமர்சித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு