உலக செய்திகள்

சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க மறுப்பு

சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க பஞ்சாப் மாகாண அரசு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லமாபாத்,

அல்அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் என்கிற ரீதியில், தனது உத்தரவின் பேரில் பணிகளை செய்ய கைதி ஒருவரை உதவியாளராக வைத்து கொள்ள நவாஸ் ஷெரீப்புக்கு உரிமை உள்ளது.

ஆனால் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது. அவருடைய அறையை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது