உலக செய்திகள்

பாகிஸ்தானில் 3.5 கோடி பேர் இறந்து இருப்பார்கள்; காப்பாற்றியது நான்தான் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

போரை நான் தடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: “அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும். போரை நிறுத்த நான் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.

போரை நான் தடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார். எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அன்றைய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது.”