உலக செய்திகள்

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி

மெக்சிகோவில் கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

மெக்சிகோ,

மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை