உலக செய்திகள்

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் டீன் ஏஜ் வயதுடைய 2 பேர் கொல்லப்பட்டனர்.

சிகாகோ,

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் டீன் ஏஜ் வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் 16 மற்றும் 19 வயதுடைய 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

இது திட்டமிடப்பட்ட தாக்குதலா என்பது பற்றி தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் முதல் 5 மாதங்களில் 8,100 பேர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் கொல்லப்பட்டு உள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை