உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

புளோரிடா,

அமெரிக்காவின் தென்கிழக்கில் புளோரிடா மாகாணத்தில் பல்பொருள் விற்பனை அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களில் பலர் தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர்.

திடீரென கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் மற்றும் குழந்தை ஒன்றும் பலியானார்கள். இதேபோன்று, இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு அருகே இருந்த நடுநிலை பள்ளி ஒன்று பாதுகாப்பிற்காக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டது. எனினும், இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை