உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.

மின்னபோலிஸ்,

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்குவாதத்தில், கூட்டத்தில் இருந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்ற 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து உள்ளது.

இதுபோன்று நகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...