Image Courtesy : AFP File  
உலக செய்திகள்

பாகிஸ்தான் : தற்கொலை தடுப்பு மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு

இதனால் அந்த நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உற்பத்தி பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு தற்கொலை தடுப்பு மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது.

குறிப்பாக மனநல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கார்பனேட், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான குளோனாசெபம் சொட்டுகள் போன்ற மருந்துகள் அங்கு தற்போது இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

லித்தியம் கார்பனேட் போன்ற மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் அங்கு கிடைத்தாலும் அந்த மருந்துகள் லித்தியம் கார்பனேட் அளவிற்கான பயனை தருவதில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது