ரோம்,
பிரதமர் மோடி, இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு அவரை நேற்று ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் சென்று சந்தித்தார். அவர்கள், வர்த்தக முதலீடு உறவுகள், பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று, பிராந்திய முன்னேற்றம் பற்றி விவாதித்தார்கள்.
இந்த சந்திப்பின்போது, 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டு சாதித்துள்ளதற்காக இந்தியாவை ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா பாராட்டினார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தடுப்பூசியில் மிகச்சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதற்காகவும், மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்கியதற்காகவும் இந்தியாவை பாராட்டினேன். உலகுக்கு தடுப்பூசி போட்டு, உலகளாவிய பெருந்தொற்றை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டியது அவசியம் என கூறி உள்ளார்.