சிங்கப்பூர்
இந்தியாவை சேர்ந்தவர் ஹரி குமார் அன்பழகன்( வயது 25) . 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக புகார் கூறப்பட்டது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சமூக வலைதளத்தில் தனக்கு ஒரு புது மொபைல் போன் வாங்க உதவி செய்யுமாறு அந்த சிறுமி கோரி இருந்தார். இதற்கு உதவ ஹரி முன்வாந்தார். அதற்கு பதிலாக என்ன எதிர்பார்க்கிறாய் என அந்த பெண் கேட்டார்.
பெண் பாலியல் சேவைகளை அளிப்பதாக கூறினார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 70 சிங்கப்பூர் டாலர்களை கொடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜோடி, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 9 மணியளவில், அவரது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தித்து கொண்டது. அந்த சிறுமி தனக்கு 16 வயது என கூறி உள்ளார். ஆனால் ஹரி அவரது சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை. பின்னர், அந்த பெண் ஹரிடம்,கீழே காத்திருக்குமாறு கூறி உள்ளார். ஆனால் ஹரி பணம் கொடுக்காமல் ஓடி விட்டார்.
பெண்ணின் பள்ளிக்கூடத்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து தெரிந்தபோது இந்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. ஹரிக்கும் சிறுமிக்கும் மொபைலில் நடந்த உரையாடல்களை வைத்து போலீசார் ஹரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதி கூறும் போது அந்தப் பெண்ணைப் பார்த்து நீங்கள் குற்ற உணர்வை துளியேனும் வெளிப்படுத்தவில்லை . அவரை காயப்படுத்தியதும் இல்லாமல் அந்த காயத்தில் உப்பை தடவியது போல் செயல்பட்டு உள்ளீர்கள் என கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சிறுவயது விலைமாதுவின் சேவையைப் பயன்படுத்தியதற்காக ஹரி ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.