உலக செய்திகள்

சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது 'பேஸ்புக்' பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றனவாம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டு, பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்ட நிலையில்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(53) மற்றும் கலாசாரம், சமூகம், இளைஞர்கள் நல மந்திரி டாங்குக்கும் (52) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 28 நாட்களில் சிங்கப்பூரில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து