உலக செய்திகள்

சிங்கப்பூரில் முககவசம் அணியாத இங்கிலாந்துவாசிக்கு 6 வாரம் சிறை

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் இன்று வரை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலைத்தடுக்க முககவசம் அணிவதை பல நாடுகள் கட்டாயம் ஆக்கி உள்ளன. அதில் சிங்கப்பூரும் அடங்கும்.

தினத்தந்தி

இந்த நிலையில் கடந்த மே மாதம் சிங்கப்பூர் ரெயிலில் பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (வயது 40) முககவசம் அணியாத நிலையில் பிடிபட்டார். அவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன் மீதான சட்டவிரோத குற்றச்சாட்டை கைவிட வேண்டும், தான் மீண்டும் குடும்பத்துடன் இங்கிலாந்து திரும்ப ஏதுவாக தனது பாஸ்போர்ட் திரும்பித்தரப்பட வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவர் முககவசம் அணியாதது சட்டப்படி குற்றம் என கருதிய கோர்ட்டு, அவருக்கு 6 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்